Monday, May 17, 2010

letsturnanewleaf.blogspot - ல் சுஜாதா புத்தகங்கள்


கீழ்க்கண்ட சுஜாதா புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

விரும்பி சொன்ன பொய்கள்
வாய்மையே சிலசமயம் வெல்லும்
பார்வை 360
நிர்வாண நகரம்
தலைமைச் செயலகம்
சிறு நாடகங்கள்
ஆஸ்டின் இல்லம்
ப்ரியா
முதல் மனைவி
6961
கற்றதும் பெற்றதும்
புதிய பக்கங்கள்
மீண்டும் ஜீனோ
அப்சரா
படிப்பது எப்படி
ஆயிரத்தில் இருவர்
காகிதச் சங்கிலிகள்
சிங்கமய்யங்கார் பேரன்
உயிராசை
நிதர்சனம்
அன்று உன் அருகில்
மூன்று நிமிஷம் கணேஷ்
சொர்க்கத்தீவு
பெண் இயந்திரம்
18 கதைகள்
சிலிக்கன் சில்லுப் புரட்சி
ரேணுகா
ஹாஸ்டல் தினங்கள்
என்றாவது ஒருநாள்
ஊஞ்சல்
கொலையுதிர்காலம்
பத்து செகண்ட் முத்தம்
விபரீத கோட்பாடு
கடவுள் வந்திருந்தார்
நில்!கவனி தாக்கு
என் இனிய இயந்திரா
மீண்டும் மத்யமர் கதைகள்
நடன மலர்
60 அமெரிக்க நாட்கள்
விக்ரம்
வஸந்தகால குற்றங்கள்

Tuesday, May 11, 2010

இணைய நூலகம்


புத்தகப் பிரியர்களுக்கான ஒரு தளம் http://letsturnanewleaf.blogspot.com/.
புத்தகங்களுக்காய் அலைந்து திரிந்த எனது நாட்களை நினைத்துப் பார்த்தேன் இந்த தளத்தை பார்த்தவுடன். நானும் ஒரு புதிய இலையை திருப்பும் ஆசையில் எனது நூலகத்தில் உள்ள சில புத்தங்களையும் இணைத்துள்ளேன். சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

Tuesday, April 27, 2010

வாழ்த்துக்கள் லேகா

முதன் முறையாக உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த இணைய தளத்திற்கான விருது பதிவர் லேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆர்குட் இணையத்தளத்தில் சில குழுமங்களின் இவர் உரையாடியதன் மூலமாகவே எனக்கு தமிழ் எழுத்தாளர்களின் இணையதளங்களும் முக்கியமாக பதிவுலகமும் அறிமுகமானது.. நேரடியான அறிமுகம் இல்லாமலிருந்தாலும் என் இணைய வாத்தியாராகவே லேகாவை நினைத்திருக்கிறேன்... இவருக்கு வாத்தியார் சுஜாதா அவார்ட்ஸ் கிடைத்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், வாசிப்பு அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் தளம் விருது பெறுவது வாசிப்பை நேசிப்பவன் என்ற முறையிலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.


வாழ்த்துக்கள் லேகா.

நன்றி உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் தேர்ந்தெடுத்த எஸ்.ரா அவர்களுக்கும்...


விருது பற்றிய அறிவிப்பு.



விருது வழங்கும் விழா பற்றிய அறிவிப்பு

Wednesday, February 24, 2010

இணையம் மூலம் ஒரு நூலகம்

என்னுடைய சிறிய நூலகத்தை நிறைய நண்பர்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இந்த தளத்தில் புத்தகங்களின் தலைப்புக்களை பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேற்று தற்செயலாக இந்த தளம் பார்த்து அதிசயித்தேன். நல்ல முயற்சி. விரைவில் என்னுடைய நூலக புத்தகங்களையும் இந்த தளத்தின் மூலம் நண்பர்கள் பெற்று கொள்ளலாம்...

வாழ்த்துக்கள் சந்திரசேகரன் கிருஷ்ணன்.

Monday, February 1, 2010

கரிசல் காடு சொல்லும் கதைகள் - கி. ராஜநாராயணனின் "வேட்டி"


கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா. வின் இந்த தொகுப்பில் வேட்டி , தான் , எங்கும் ஒரு நிறை , கனிவு , வேலை..வேலையே வாழ்க்கை , மகாலட்சுமி , கனா , பூவை , கரிசல்காட்டில் ஒரு சம்சாரி ஆகிய சிறுகதைகளும் எங்கள் ஊர் , நானும் என் எழுத்தும் , கதைக்கு ஒரு கரு , வியத் + நாம் ஆகிய கட்டுரைகளும் சில கடிதங்களும் உள்ளன.

தனது ஒரே வேட்டி கிழிந்து போன நிலையில் தூங்காநாயக்கருக்கு பீறிடும் வேட்டி பற்றிய நினைவுகளே வேட்டி. வகை வகையான வேட்டிகள் மற்றும் துவைக்கும் முறைகள் பற்றிய விவரிப்பு, குறிப்பாக துவை வேட்டி பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனக்கே உரிய நகைச்சுவையுடன் விவரித்திருப்பது அருமை... சுதந்திரம் வாங்கி கால் நூற்றாண்டு ஆனபிறகும் (எழுதிய ஆண்டு - 1972) சாலைகளின் தரம் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்கு விவசாயின் வாழ்க்கை தரம் வளராததன் முரண் பற்றிய அங்கதம் சிறப்பு.
கனிவு - கிராம புதுமண ஜோடியின் காதலையும் ஊடலையும் சொல்லும் ரொமான்ஸ் கதை. தொழுவுக்கு மாடு பிடிப்பது போல் மாலையிட்டு கொண்டையா வீட்டுக்கு வரும் மல்லம்மா... அவர்களுக்குள் நடக்கும் ஈகோ, பாம்பு கடித்தபின் ஊற்றெடுக்கும் காதல், ஆடியில் படும் அவஸ்தை(ஆடி பாதி ஆண்டு பாதி) என தனக்கே உரிய கிளுகிளுப்பான மொழியில் கி.ரா கலக்கியிருப்பார்... இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது.

எருமை மாடு மேய்க்க கொண்டுவரப்படும் சிறுமி பேரக்காள் பூ வாசனையே இன்றி வளர்ந்து திருமண நாளன்று பூ வாசனையால் மயங்கி விழும் நிகழ்வை ஒரே மூச்சில் நெஞ்சில் தைக்கும்படி சொல்லும் கதை பூவை. (கதைகேற்ற அருமையான தலைப்பு)

நாவலாக விரிக்கும் சாத்தியங்களுடைய கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற சிறுகதை ஒரு மனிதரின் முழு வாழ்க்கையையும் கண் முன் காட்டுகிறது.

அறிமுக எழுத்தாளர்களுக்கு உபயோகமான கதைக்கரு பற்றிய ஒரு கட்டுரையும் அருமை.


இந்த புத்தகம் பற்றிய யாழிசையின் அருமையான பதிவு - http://yalisai.blogspot.com/2008/11/blog-post_24.html

Monday, January 18, 2010

பறவையின் பார்வையில் உலகம் - சாரு நிவேதிதாவின் "மலாவி என்றொரு தேசம்"


இணையம் மூலமாக மலாவியிலிருந்து வாசகர் ஆனந்த் அண்ணாமலை சாருவிற்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சாருவின் பதில்களின் தொகுப்பே "மலாவி என்றொரு தேசம்"


"நம் கனவிலிருந்து பூமியில் நழுவி விழுந்த ஒரு சொர்க்கம்" என்று மலாவியை பற்றி ஆனந்த் விவரிக்கும் புள்ளியில் ஆரம்பிக்கும் உரையாடல் மலாவியின் நயாசா ஏரி, வறுமை, வாழ்க்கை முறை, சமகால இலக்கியம், மதம், ஆன்மிகம், அங்குவாழும் இந்தியர்களின் உயர் மனோபாவம் என்று பயணித்து யு.ஜி,ஜே.கே,ஓஷோ என சுழன்று மீண்டும் மலாவியின் பாரம்பரிய குலே நடனம், இந்திய கல்வி முறை,செட்டிநாடு உணவு பழக்கம் என்று விரிந்து முடிகிறது.


புத்தக வெளியீடு விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல, சில சமயங்களில் ஆனந்த் மயிலாப்பூரிலும் , சாரு மலாவியிலும் இருப்பது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது. சுயநல வியாபார நிமித்தம் ஆப்ரிக்காவில் நுழைந்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறையை குலைத்த பின், அவர்களை முட்டாள்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கும் காலனிய பார்வையை ஆனந்தும் வைத்திருப்பது சற்று நெருடலான விஷயம். சாரு இன்னும் இது பற்றி விளக்கமாக எழுதி இருக்கலாம்...


சாருவின் வழக்கமான நான்-லீனியர் உரையாடலும், பல்வேறு விஷயங்களை ஆழமாக தொட்டு செல்வதும், ஆனந்த் மலாவியர்களை பற்றியும் குலே நடனத்தையும் சிறுகதை போன்று விவரிப்பதும் இந்த புத்தகத்தின் பலம். குறிப்பாக " இண்டலெக்சுவல் ப்ராஸ்டிட்டியூட்ஸ்" மற்றும் "கழுகின் ரத்தம்" ஆழ்விவாதத்திற்குரிய பகுதிகள்.


புத்தகத்தை இன்னும் கவனமாக எடிட் செய்திருக்கலாம். உதாரணம் ஒரு வாசகரின் தமிழ் எழுத்துரு பற்றிய கேள்வி. (பக்கம் - 86 )



தலைப்பு - மலாவி என்றொரு தேசம்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்.



பின் குறிப்பு: இந்த புத்தகத்தை சாரு சமர்பித்திருக்கும் "வள்ளியூர் ஞான பாஸ்கர்" அடியேன் தான். இந்த கௌரவத்தை வழங்கிய சாருவிற்கு நன்றிகள்.

Wednesday, July 29, 2009

நாளை...

வித்தியாசம் ஒன்றுமில்லை
நேற்றைக்கும் இன்றைக்கும்,
அது நேற்று இது இன்று
என்பதை தவிர..