Friday, July 16, 2010

சனிக்கிழமை சந்திப்பு...

Unturned Pages-இன் முதல் சந்திப்பு இந்த சனிக்கிழமை நடத்துவதாக உத்தேசம்.
எங்கே: பெசண்ட் நகர் கடற்கரை போலிஸ் பீட் பின்புறம் இருக்கும் மணலில்
எப்போது: மாலை 5 30 மணி அளவில்

இந்த சந்திப்பில் இந்தியாவில் கட்டுபாடின்றி உயர்ந்து கொண்டே இருக்கும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவது குறித்தோ, பிரமிளின் கவிதைகளில் காணப்படும் படிமங்கள் குறித்தோ, சட்டீஸ்கரில் மாவோவிஸ்ட் அமைப்புகள் மீதான இந்தியாவின் கொள்கை நிலைபாடு குறித்தோ மற்றும் இது போன்ற அதிகனமான விஷயங்கள் குறித்தோ சத்தியமாக பேசமாட்டோம் என்ற உறுதி மொழியை உங்களுக்கு அளிக்கிறேன்.

இந்த சந்திப்பில் புத்தகங்களை வாடகைக்கு தருபவர்களும் வாடகைக்கு வாங்குபவர்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு புத்தகங்களை பரிமாறிக்கொள்ளலாம். இது வரை UnturnedPages-இல் வாடகைக்கு கிடைக்கக்கூடிய புத்தக பட்டியல் http://letsturnanewleaf.blogspot.com என்ற வலைதள முகவரியில் இருக்கிறது.அதில் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை எனக்கு முன்கூட்டியே சொல்லி விட்டால் அதை எடுத்து வந்து உங்களுக்கு தர வசதியாக இருக்கும்.

இந்த சேவை குறித்து உங்களுக்கு கருத்துகள்/ ஆலோசனைகள் ஏதும் இருந்தால் தெரியப்படுத்தலாம். இன்னும் அதிகமாக தேவைப்படும் வசதிகள் குறித்தும் தெரியப்படுத்தலாம்.

இந்த சந்திப்பை மாதம் ஒருயாவது கட்டாயம் நடத்தும் திட்டம் இருக்கிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் எடுத்துச் சென்று படித்து அடுத்த மாதம் கூட தரலாம்.

தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், தேவையில்லாதவர்களும் இது பயன்படுமா என்று ஆராய்வதற்காவது வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

தொடர்புக்கு:
பாஸ்கர் - 9841515111

Monday, May 24, 2010

மேலும் சில புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
திசைகளுக்கு அப்பால் - இந்திரா பார்த்தசாரதி - நாவல்
ஏசுவின தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி - நாவல்
வேதபுரத்து வியாபாரிகள் - இந்திரா பார்த்தசாரதி - நாவல்
சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - நாவல்
குருதிப் புனல் - இந்திரா பார்த்தசாரதி - நாவல்

**********************************************************************************
ஆஸ்பத்திரி - சுதேசமித்திரன் - நாவல்
காக்டெயில் - சுதேசமித்திரன் - நாவல்

**********************************************************************************
சாந்த குமாரி - சா.கந்தசாமி - நாவல்
சாயாவனம் - சா.கந்தசாமி - நாவல்

***********************************************************************************
மனிதன் என்றொரு தீவு - கோமல் சுவாமிநாதன் - நாவல்
தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன் - நாடகம்

***********************************************************************************
முள் வேலிகள் - நா.பார்த்தசாரதி - நாவல்
சாயங்கால மேகங்கள் - நா.பார்த்தசாரதி - நாவல்
நெற்றிக்கண் - நா.பார்த்தசாரதி - நாவல்
ஆத்மாவின் ராகங்கள் - நா.பார்த்தசாரதி - நாவல்
கபாடபுரம் - நா.பார்த்தசாரதி - நாவல்

************************************************************************************
புனலும் மணலும் - ஆ.மாதவன் - நாவல்
கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் - நாவல்

************************************************************************************
தூயோன் - கோபி கிருஷ்ணன் - சிறுகதை தொகுப்பு
உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன் - சிறுகதை தொகுப்பு
டேபிள் டென்னிஸ் - கோபி கிருஷ்ணன் - குறு நாவல்
இடாகினிப் பேய்களும்...- கோபி கிருஷ்ணன் - நாவல்

*************************************************************************************
முத்துக்கள் பத்து - ஆ.மாதவன் - சிறுகதை தொகுப்பு
முத்துக்கள் பத்து - எம்.வி.வெங்கட்ராம் - சிறுகதை தொகுப்பு

*************************************************************************************
கள்ளி - வா.மு.கோமு - நாவல்
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு - நாவல்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

வைக்கம் முஹம்மது பஷீர் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்

கீழ்க்கண்ட வைக்கம் முஹம்மது பஷீர் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சப்தங்கள் & மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மகள் - நாவல்
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - நாவல்
உலகப் புகழ் பெற்ற மூக்கு - சிறுகதை தொகுப்பு

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

பெருமாள் முருகன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட பெருமாள் முருகன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பீக்கதைகள் - சிறுகதை தொகுப்பு
கூள மாதாரி - நாவல்
ஏறு வெயில் - நாவல்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

மனுஷ்யபுத்திரன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்

கீழ்க்கண்ட மனுஷ்யபுத்திரன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அதீதத்தின் ருசி
நீராலானது
இடமும் இருப்பும்
கடவுளுடன் பிரார்த்தித்தல்
மணலின் கதை
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

Friday, May 21, 2010

அசோக மித்திரன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட அசோக மித்திரன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

******************************************
கரைந்த நிழல்கள்
இருவருக்கும் போதும்
பயாஸ்கோப்
ஒரு பார்வையில் சென்னை நகரம்
18வது அட்சரகோடு
இன்று
ஒரு கிராமத்து அத்தியாயம்
விடுதலை
********************************************

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

Thursday, May 20, 2010

ஜெயகாந்தன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட ஜெயகாந்தன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111
#######################################

ஒரு யுகசந்தியின் புதிய தரிசனங்கள்
மாலை மயக்கம்
இந்த நேரத்தில் இவள்...
அந்த அக்காவைத் தேடி...
வாழ்க்கை அழைக்கிறது
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
உன்னைப் போல் ஒருவன்
கங்கை எங்கே போகிறாள்
இறந்த காலங்கள்
உண்மை சுடும்
பிரளயம்
கழுத்தில் விழுந்த மாலை&நம்ப மாட்டேளே
வாக்குமூலம்
யுக சந்தி
ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்
கோகிலா என்ன செய்துவிட்டாள்?
இல்லாதவர்கள்
இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்
ஒ,அமெரிக்கா
பாவம்,இவள் ஒரு பாப்பாத்தி
ரிஷிமூலம்&ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன
பிரம்மோபதேசம்
சினிமாவுக்குப் போன சித்தாளு
குருபீடம்
புகை நடுவினிலே
ஆயுத பூசை
ஈஸ்வர அல்லா தேரே நாம்
தேவன் வருவாரா
இனிப்பும் கரிப்பும்
கைவிலங்கு
சக்கரம் நிற்பதில்லை
இன்னும் ஒரு பெண்ணின் கதை
காவல் தெய்வம்
எங்கெங்கு காணினும்
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்


#########################################

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

பாலகுமாரன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்

கீழ்க்கண்ட பாலகுமாரன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

****************************

மாலை நேரத்து மயக்கம்
மனம் உருகுதே
பெண்ணாசை
கைவீசம்மா கைவீசு
வர்ண வியாபாரம்
சின்ன சின்ன வட்டங்கள்
சிநேகமுள்ள சிங்கம்
என்னவளே அடி என்னவளே
கனவுக் குடித்தனம்
அடுக்கு மல்லி
நீ வருவாய் என
விசிறி சாமியார்
மணல் நதி
மேய்ச்சல் மைதானம்
மெர்க்குரிப் பூக்கள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
மெளனமே காதலாக...
நிழல் யுத்தம்
கண்ணாடி கோபுரங்கள்
ஆனந்த வயல்
உயிர்ச் சுருள்
நானே எனக்கொரு போதிமரம்

************************************

மேலும் சுஜாதா,சாரு,எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் புத்தகங்களும் கிடைக்கின்றன.

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

Wednesday, May 19, 2010

ஜெயமோகன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட ஜெயமோகன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

***************************

திசைகளின் நடுவே
மண்
ரப்பர்
ஆயிரம் கால மண்டபம்
ஜெயமோகன் சிறுகதைகள்
ஊமைச் செந்நாய்
எழுதும் கலை
வாழ்விலே ஒருமுறை
நாவல் கோட்பாடு
கன்னியாகுமரி
காடு

*************************

மேலும் சுஜாதா,சாரு,எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களும் கிடைக்கின்றன.

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

&&&&&&&&&&&&&&&&&&&&

பதேர் பாஞ்சாலி
ஏழுதலை நகரம்
உறுபசி
உலக சினிமா
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
நெடுங்குருதி
யாமம்
உப பாண்டவம்
கதாவிலாசம்
தேசாந்திரி
துணையெழுத்து

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, May 17, 2010

letsturnanewleaf.blogspot.com - ல் சாரு புத்தகங்கள்



கீழ்க்கண்ட சாரு நிவேதிதா புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கோணல் பக்கங்கள் - 2
கோணல் பக்கங்கள் - 3
அருகில் வராதே
வாழ்வது எப்படி?
அதிகாரம்.அமைதி.சுதந்திரம்.
இரண்டாம் ஆட்டம்
நரகத்திலிருந்து ஒரு குரல்
கெட்ட வார்த்தை
கனவுகளின் மொழிபெயர்பாளன்
ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
மலாவி என்றொரு தேசம்
எக்ஸிஸ்டென்ஷியலிசமும பேன்சி பனியனும்
சினிமா சினிமா
ஜீரோ டிகிரி
பாலியல் - சாரு,நளினி ஜமீலா உரையாடல்
கலகம் காதல் இசை
தப்பு தாளங்கள்
நேனோ
ஊரின் மிக அழகான பெண்
வரம்பு மீறிய பிரதிகள்
எனக்கு குழந்தைகளை பிடிக்காது
ஆஸாதி...ஆஸாதி...ஆஸாதி...
தாந்தேயின் சிறுத்தை
காமரூப கதைகள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

letsturnanewleaf.blogspot - ல் சுஜாதா புத்தகங்கள்


கீழ்க்கண்ட சுஜாதா புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

விரும்பி சொன்ன பொய்கள்
வாய்மையே சிலசமயம் வெல்லும்
பார்வை 360
நிர்வாண நகரம்
தலைமைச் செயலகம்
சிறு நாடகங்கள்
ஆஸ்டின் இல்லம்
ப்ரியா
முதல் மனைவி
6961
கற்றதும் பெற்றதும்
புதிய பக்கங்கள்
மீண்டும் ஜீனோ
அப்சரா
படிப்பது எப்படி
ஆயிரத்தில் இருவர்
காகிதச் சங்கிலிகள்
சிங்கமய்யங்கார் பேரன்
உயிராசை
நிதர்சனம்
அன்று உன் அருகில்
மூன்று நிமிஷம் கணேஷ்
சொர்க்கத்தீவு
பெண் இயந்திரம்
18 கதைகள்
சிலிக்கன் சில்லுப் புரட்சி
ரேணுகா
ஹாஸ்டல் தினங்கள்
என்றாவது ஒருநாள்
ஊஞ்சல்
கொலையுதிர்காலம்
பத்து செகண்ட் முத்தம்
விபரீத கோட்பாடு
கடவுள் வந்திருந்தார்
நில்!கவனி தாக்கு
என் இனிய இயந்திரா
மீண்டும் மத்யமர் கதைகள்
நடன மலர்
60 அமெரிக்க நாட்கள்
விக்ரம்
வஸந்தகால குற்றங்கள்

Tuesday, May 11, 2010

இணைய நூலகம்


புத்தகப் பிரியர்களுக்கான ஒரு தளம் http://letsturnanewleaf.blogspot.com/.
புத்தகங்களுக்காய் அலைந்து திரிந்த எனது நாட்களை நினைத்துப் பார்த்தேன் இந்த தளத்தை பார்த்தவுடன். நானும் ஒரு புதிய இலையை திருப்பும் ஆசையில் எனது நூலகத்தில் உள்ள சில புத்தங்களையும் இணைத்துள்ளேன். சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

Tuesday, April 27, 2010

வாழ்த்துக்கள் லேகா

முதன் முறையாக உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த இணைய தளத்திற்கான விருது பதிவர் லேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆர்குட் இணையத்தளத்தில் சில குழுமங்களின் இவர் உரையாடியதன் மூலமாகவே எனக்கு தமிழ் எழுத்தாளர்களின் இணையதளங்களும் முக்கியமாக பதிவுலகமும் அறிமுகமானது.. நேரடியான அறிமுகம் இல்லாமலிருந்தாலும் என் இணைய வாத்தியாராகவே லேகாவை நினைத்திருக்கிறேன்... இவருக்கு வாத்தியார் சுஜாதா அவார்ட்ஸ் கிடைத்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், வாசிப்பு அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் தளம் விருது பெறுவது வாசிப்பை நேசிப்பவன் என்ற முறையிலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.


வாழ்த்துக்கள் லேகா.

நன்றி உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் தேர்ந்தெடுத்த எஸ்.ரா அவர்களுக்கும்...


விருது பற்றிய அறிவிப்பு.



விருது வழங்கும் விழா பற்றிய அறிவிப்பு

Wednesday, February 24, 2010

இணையம் மூலம் ஒரு நூலகம்

என்னுடைய சிறிய நூலகத்தை நிறைய நண்பர்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இந்த தளத்தில் புத்தகங்களின் தலைப்புக்களை பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேற்று தற்செயலாக இந்த தளம் பார்த்து அதிசயித்தேன். நல்ல முயற்சி. விரைவில் என்னுடைய நூலக புத்தகங்களையும் இந்த தளத்தின் மூலம் நண்பர்கள் பெற்று கொள்ளலாம்...

வாழ்த்துக்கள் சந்திரசேகரன் கிருஷ்ணன்.

Monday, February 1, 2010

கரிசல் காடு சொல்லும் கதைகள் - கி. ராஜநாராயணனின் "வேட்டி"


கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா. வின் இந்த தொகுப்பில் வேட்டி , தான் , எங்கும் ஒரு நிறை , கனிவு , வேலை..வேலையே வாழ்க்கை , மகாலட்சுமி , கனா , பூவை , கரிசல்காட்டில் ஒரு சம்சாரி ஆகிய சிறுகதைகளும் எங்கள் ஊர் , நானும் என் எழுத்தும் , கதைக்கு ஒரு கரு , வியத் + நாம் ஆகிய கட்டுரைகளும் சில கடிதங்களும் உள்ளன.

தனது ஒரே வேட்டி கிழிந்து போன நிலையில் தூங்காநாயக்கருக்கு பீறிடும் வேட்டி பற்றிய நினைவுகளே வேட்டி. வகை வகையான வேட்டிகள் மற்றும் துவைக்கும் முறைகள் பற்றிய விவரிப்பு, குறிப்பாக துவை வேட்டி பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனக்கே உரிய நகைச்சுவையுடன் விவரித்திருப்பது அருமை... சுதந்திரம் வாங்கி கால் நூற்றாண்டு ஆனபிறகும் (எழுதிய ஆண்டு - 1972) சாலைகளின் தரம் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்கு விவசாயின் வாழ்க்கை தரம் வளராததன் முரண் பற்றிய அங்கதம் சிறப்பு.
கனிவு - கிராம புதுமண ஜோடியின் காதலையும் ஊடலையும் சொல்லும் ரொமான்ஸ் கதை. தொழுவுக்கு மாடு பிடிப்பது போல் மாலையிட்டு கொண்டையா வீட்டுக்கு வரும் மல்லம்மா... அவர்களுக்குள் நடக்கும் ஈகோ, பாம்பு கடித்தபின் ஊற்றெடுக்கும் காதல், ஆடியில் படும் அவஸ்தை(ஆடி பாதி ஆண்டு பாதி) என தனக்கே உரிய கிளுகிளுப்பான மொழியில் கி.ரா கலக்கியிருப்பார்... இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது.

எருமை மாடு மேய்க்க கொண்டுவரப்படும் சிறுமி பேரக்காள் பூ வாசனையே இன்றி வளர்ந்து திருமண நாளன்று பூ வாசனையால் மயங்கி விழும் நிகழ்வை ஒரே மூச்சில் நெஞ்சில் தைக்கும்படி சொல்லும் கதை பூவை. (கதைகேற்ற அருமையான தலைப்பு)

நாவலாக விரிக்கும் சாத்தியங்களுடைய கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற சிறுகதை ஒரு மனிதரின் முழு வாழ்க்கையையும் கண் முன் காட்டுகிறது.

அறிமுக எழுத்தாளர்களுக்கு உபயோகமான கதைக்கரு பற்றிய ஒரு கட்டுரையும் அருமை.


இந்த புத்தகம் பற்றிய யாழிசையின் அருமையான பதிவு - http://yalisai.blogspot.com/2008/11/blog-post_24.html

Monday, January 18, 2010

பறவையின் பார்வையில் உலகம் - சாரு நிவேதிதாவின் "மலாவி என்றொரு தேசம்"


இணையம் மூலமாக மலாவியிலிருந்து வாசகர் ஆனந்த் அண்ணாமலை சாருவிற்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சாருவின் பதில்களின் தொகுப்பே "மலாவி என்றொரு தேசம்"


"நம் கனவிலிருந்து பூமியில் நழுவி விழுந்த ஒரு சொர்க்கம்" என்று மலாவியை பற்றி ஆனந்த் விவரிக்கும் புள்ளியில் ஆரம்பிக்கும் உரையாடல் மலாவியின் நயாசா ஏரி, வறுமை, வாழ்க்கை முறை, சமகால இலக்கியம், மதம், ஆன்மிகம், அங்குவாழும் இந்தியர்களின் உயர் மனோபாவம் என்று பயணித்து யு.ஜி,ஜே.கே,ஓஷோ என சுழன்று மீண்டும் மலாவியின் பாரம்பரிய குலே நடனம், இந்திய கல்வி முறை,செட்டிநாடு உணவு பழக்கம் என்று விரிந்து முடிகிறது.


புத்தக வெளியீடு விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல, சில சமயங்களில் ஆனந்த் மயிலாப்பூரிலும் , சாரு மலாவியிலும் இருப்பது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது. சுயநல வியாபார நிமித்தம் ஆப்ரிக்காவில் நுழைந்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறையை குலைத்த பின், அவர்களை முட்டாள்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கும் காலனிய பார்வையை ஆனந்தும் வைத்திருப்பது சற்று நெருடலான விஷயம். சாரு இன்னும் இது பற்றி விளக்கமாக எழுதி இருக்கலாம்...


சாருவின் வழக்கமான நான்-லீனியர் உரையாடலும், பல்வேறு விஷயங்களை ஆழமாக தொட்டு செல்வதும், ஆனந்த் மலாவியர்களை பற்றியும் குலே நடனத்தையும் சிறுகதை போன்று விவரிப்பதும் இந்த புத்தகத்தின் பலம். குறிப்பாக " இண்டலெக்சுவல் ப்ராஸ்டிட்டியூட்ஸ்" மற்றும் "கழுகின் ரத்தம்" ஆழ்விவாதத்திற்குரிய பகுதிகள்.


புத்தகத்தை இன்னும் கவனமாக எடிட் செய்திருக்கலாம். உதாரணம் ஒரு வாசகரின் தமிழ் எழுத்துரு பற்றிய கேள்வி. (பக்கம் - 86 )



தலைப்பு - மலாவி என்றொரு தேசம்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்.



பின் குறிப்பு: இந்த புத்தகத்தை சாரு சமர்பித்திருக்கும் "வள்ளியூர் ஞான பாஸ்கர்" அடியேன் தான். இந்த கௌரவத்தை வழங்கிய சாருவிற்கு நன்றிகள்.