Unturned Pages-இன் முதல் சந்திப்பு இந்த சனிக்கிழமை நடத்துவதாக உத்தேசம்.
எங்கே: பெசண்ட் நகர் கடற்கரை போலிஸ் பீட் பின்புறம் இருக்கும் மணலில்
எப்போது: மாலை 5 30 மணி அளவில்
இந்த சந்திப்பில் இந்தியாவில் கட்டுபாடின்றி உயர்ந்து கொண்டே இருக்கும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவது குறித்தோ, பிரமிளின் கவிதைகளில் காணப்படும் படிமங்கள் குறித்தோ, சட்டீஸ்கரில் மாவோவிஸ்ட் அமைப்புகள் மீதான இந்தியாவின் கொள்கை நிலைபாடு குறித்தோ மற்றும் இது போன்ற அதிகனமான விஷயங்கள் குறித்தோ சத்தியமாக பேசமாட்டோம் என்ற உறுதி மொழியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இந்த சந்திப்பில் புத்தகங்களை வாடகைக்கு தருபவர்களும் வாடகைக்கு வாங்குபவர்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு புத்தகங்களை பரிமாறிக்கொள்ளலாம். இது வரை UnturnedPages-இல் வாடகைக்கு கிடைக்கக்கூடிய புத்தக பட்டியல் http://letsturnanewleaf.blogspot.com என்ற வலைதள முகவரியில் இருக்கிறது.அதில் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை எனக்கு முன்கூட்டியே சொல்லி விட்டால் அதை எடுத்து வந்து உங்களுக்கு தர வசதியாக இருக்கும்.
இந்த சேவை குறித்து உங்களுக்கு கருத்துகள்/ ஆலோசனைகள் ஏதும் இருந்தால் தெரியப்படுத்தலாம். இன்னும் அதிகமாக தேவைப்படும் வசதிகள் குறித்தும் தெரியப்படுத்தலாம்.
இந்த சந்திப்பை மாதம் ஒருயாவது கட்டாயம் நடத்தும் திட்டம் இருக்கிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் எடுத்துச் சென்று படித்து அடுத்த மாதம் கூட தரலாம்.
தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், தேவையில்லாதவர்களும் இது பயன்படுமா என்று ஆராய்வதற்காவது வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.
தொடர்புக்கு:
பாஸ்கர் - 9841515111
2 comments:
NICE ARRANGEMENT, I WILL TRY TO ATTEND, ALL THE VERY BEST
தகவலைத் தொளிவாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
Post a Comment