Monday, May 24, 2010

வைக்கம் முஹம்மது பஷீர் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்

கீழ்க்கண்ட வைக்கம் முஹம்மது பஷீர் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.

gnanabaskarr@yahoo.com
9841515111

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சப்தங்கள் & மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மகள் - நாவல்
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - நாவல்
உலகப் புகழ் பெற்ற மூக்கு - சிறுகதை தொகுப்பு

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

6 comments:

துளசி கோபால் said...

புத்தகங்களை வெளியூருக்கும் அனுப்புவீங்களா?

எத்தனை நாள் வச்சுக்கலாம்.

கொஞ்சம் விவரமா ஒரு பதிவு போடுங்களேன்.

Baski.. said...

@துளசி கோபால்:

வருகைக்கு நன்றி. வெளியூருக்கு அனுப்பும் அளவுக்கு கம்பெனி இன்னும் வளரவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :(

துளசி கோபால் said...

நன்றிங்க. கம்பெனி வளர்ந்தவுடன் சொல்லுங்க. ஆனால் அப்ப வெளிநாட்டுக்கு நீங்க அனுப்ப வேண்டி இருக்கும். சில மாசங்கள்தான் இந்தியாவில் இருப்போம்.

மேன்மேலும் வளர இனிய வாழ்த்து(க்)கள்.

இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிட்டீங்கன்னா பின்னூட்டம் அனுப்புவது எளிது.
அதான் மாடரேஷன் இருக்குதுங்களே.

Baski.. said...

@துளசி கோபால்:
வேர்டு வெரிஃபிகேஷ
னா???? இப்பிடி ஒன்னு ஆக்டிவேட்ல இருக்கிறது நீங்க சொல்லித்தாங்க தெரியும்... யாராவது விபரம் தெரிஞ்சவுங்க கிட்ட கேட்டு தூக்கிடறேங்க.. ரொம்ப நன்றிங்க... (எப்பிடி டி-ஆக்டிவேட் பண்றதுன்னு சொலிட்டு போனீங்கன்னா கொஞ்சம் உதவியா இருக்கும்.. நமக்கு கொஞ்சம் டெக்னாலஜிபோபியா!!!)

துளசி கோபால் said...

உங்க பதிவுக்கான டேஷ் போர்டில் போங்க. செட்டிங்க்ஸ் இருக்கு பாருங்க.அதைக் க்ளிக்குனா பேஸிக், பப்ளிஷிங், ஃபார்மேட்டிங், கமெண்ட்ஸ்ன்னு வரிசையா இருக்கு பாருங்க. அதுலே கமெண்ட்ஸ் க்ளிக் செஞ்சால் அந்தப் பக்கம் திறக்கும். அதுலே கீழே பார்த்துக்கிட்டே ஸ்க்ரோல் செய்யுங்க.

ஷோ வேர்டு வெரிஃபிகேஷன்னு ஒன்னு வரும். அதுலே இருக்கும் 'நோ' வைக் க்ளிக்கிட்டு கடைசியில் வந்து ஸேவ் செட்டிங்ஸ் க்ளிக்குனா ஆச்சு. அம்புட்டுதான்.

நானும் ஒரு க கை நா (இதுக்கு காப்பி ரைட் நம்மகிட்டேதான் இருக்கு) தாங்க. எப்படியோ முக்கியமான சிலதைக் கத்துக்கிட்டு ஒரு அஞ்சு வருசம் எட்டு மாசமா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

Baski.. said...

@துளசி கோபால்:
வேர்டு வெரிஃபிகேஷன தூக்கியாச்சு... ரொம்ப நன்றி..

Post a Comment